நிலுவையில் உள்ள 4 டிஎம்சி நீரை திறக்க கோரிக்கை தமிழகம் வரும் கிருஷ்ணா நீர்: தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆந்திர நீர்வளத்துறைக்கு கடிதம்

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு தர வேண்டும். தற்போது, 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி நீர் மட்டம் 846  மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் கோடைகாலம் என்பதால் சென்னை மாநகரின் குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது.   எனவே, கடந்த தவணை காலத்தில் 7.6 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது. 4.4 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும்.  தமிழகத்துக்கு வர வேண்டிய 4.4 டிஎம்சி கிருஷ்ணா நீரை பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில், கடந்த தவணை காலத்தில் தர வேண்டிய 4 டிஎம்சி நீரை விடுவிக்குமாறு தமிழக நீர்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் 68 டிஎம்சி கொள்ளளவு ெகாண்ட கண்டலேறு அணையில் 46 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு கோரிக்கையின் பேரில் இம்மாத இறுதியில் ஆந்திரா-தமிழக எல்லைகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது இந்த நீரை விடுவிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>