ஸ்கேன் சென்டருக்கு 5 ஆயிரம் அபராதம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட தெருக்கள் சீல்  வைக்கப்பட்டு, கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமலை தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜனார்த்தனன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாதது, ஏ.சி. சாதனத்தை இயக்கியது போன்ற பாதுகாப்பு விதிகளை மீறியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஸ்கேன் மையத்திற்கு 5 ஆயிரம்  அபராதம் விதித்து எச்சரித்தனர்.

Related Stories:

>