மாணவர்கள் உயர்கல்வி பெறுவதே நோக்கம் ஆல்பாஸ் போடுவதால் கிடைக்கும் பாராட்டு அரசுக்கு வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி: கொரோனா நிவாரண  நிதி முதல் தவணை ரூ.2,000 ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைவருமே நிச்சயம் தேர்வு  நடத்த வேண்டும் என்ற கருத்தை  முன்வைத்து வருகின்றனர். இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நோய் தாக்கத்தின் விளைவு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு  இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதில் உறுதியாக இருக்கிறோம்.

இங்கு நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பு அரசு  கொடுத்தால் மாணவர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியை தந்து அரசை பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்கு தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று  மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியை  பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றார்.

Related Stories: