சொல்லிட்டாங்க...

கொரோனா முதல் அலையின்போது கிராமப்புறங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது அலையில் பல்வேறு மாநிலங்களில் கிராமப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. - பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவின், பல மாநிலங்களில் கவலைக்குரிய அளவில் கொரோனா தொற்று அதிகரிப்பும், மருத்துவமனையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.  - உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம்.

ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை. - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம். ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

Related Stories:

>