கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கும் இந்திய வகை வைரஸ்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை இந்திய வகை இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக இரட்டை உருமாற்ற வகை கொரோனா வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2வது அலை மிக மோசமாக இந்த வகை வைரசே காரணம் என கருதப்படுகிறது. இது தற்போது 44 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. மிகத் தீவிரமாக பரவும் வீரியமிக்க இந்த வைரஸ், தடுப்பூசிகளின் செயல்திறனையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தற்போது கூறி உள்ளனர். இந்தியாவில் காணப்படும் உருமாறிய பி.1.617 வகை கொரோனா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவக்கூடியது என்று உலீக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட ஆய்வுகளில் பி.1.617.1 மற்றும் பி1.617.2 ஆகியவை கணிசமாக அதிக பரவல் விகிதத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகவும், பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளின் செயல்திறனையும் இது குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இந்திய வகை வைரசுக்கு எதிராக குறைவான செயல்திறனையே கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு இணை குழுவினர் துணைத் தலைவருமான ஆன்டனி ஹர்ன்டன் கூறுகையில், ‘‘இரட்டை உருமாற்ற வைரசின் லேசான தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன்கள் குறைகின்றன. ஆனால் தீவிர பாதிப்புக்கு எதிராக அவற்றின் செயல்திறன் குறைவாக நாங்கள் கருதவில்லை. அதே போல, நோய் பரவலை விஷயத்திலும் தடுப்பூசிகளின் செயல்திறன் குறைகிறது. இது காய்ச்சலை தீவிரமாக்குகிறதா அல்லது தடுப்பூசியை முற்றிலும் முடக்குகிறதா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன’’ என்றார்.

Related Stories: