வேளாண் சட்ட போராட்டம்: 26ம் தேதி கருப்பு தினமாக விவசாயிகள் அனுசரிப்பு

புதுடெல்லி:  மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி திக்ரி, சிங்கு, காஜிபூர் எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம்தொடங்கி 6 மாதங்கள் ஆவதையொட்டி, வருகிற 26ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 40 விவசாயி அமைப்புகளை கொண்ட சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர் பல்பிர் சிங் ராஜேவால் கூறுகையில்,” மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் பஞ்சாப் உட்பட நாடு முழுவதும் உள்ள  பொதுமக்கள் வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள். கருப்பு தினத்தை அனுசரிப்பதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

Related Stories: