×

கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் திகார் சிறையில் கைதி அடித்து கொலை

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவுவதால் சாதாரண குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து சிறை துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘சிறை எண் இரண்டில், கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அடித்து கொல்லப்பட்ட கைதி காந்த் அல்லது அப்பு, கடந்த 2015ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்றவர். கைதி கொலை தொடர்பாக வழக்குபதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.Tags : Tihar Jail , Prisoner beaten to death in Tihar Jail
× RELATED அம்பானி வீட்டருகே கார் நின்ற சம்பவம்:...