×

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: டெஸ்ட், ஒருநாள் போட்டி அணியில் முதன்முதலாக ஷபாலி வர்மாவுக்கு இடம்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. உலக சாம்பியன் ஷிப் பைனலில் ஆட, வரும் 2ம் தேதி லண்டன் புறப்படும் ஆடவர் அணியுடன் மகளிர் அணியும் செல்கிறது. இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட், 3 ஒன்டே மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), புனம் ரவுத், பிரியா புனியா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, சினே ராணா, தானியா பாட்டியா (வி.கீ), இந்திராணி ராய் (வி.கீ), ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ்.

டி 20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹார்லீன் தியோல், சினே ராணா, தானியா பாட்டியா (வி.கீ.), இந்திராணி ராய் (வி.கீ), ஷிகாபாண்டே பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், சிம்ரன் பகதூர்.Tags : England ,Shabali Varma , Series against England: First place for Shabali Verma in Test and ODI squad
× RELATED சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா...