இத்தாலி ஓபன் டென்னிஸ்; கால் இறுதியில் காயத்தால் ஆஷ்லே பார்டி விலகல்: ஜோகோவிச் பின்னடைவு

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடந்து வரும் இந்த தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் 24 வயது ஆஷ்லே பார்டி, 17 வயது மாணவியான அமெரிக்காவின் கோகோ காஃப்வுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என பார்டி கைப்பற்றினார். 2வது செட்டில் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியில் வெளியேற கோகோ காஃப் கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வரும் 30ம் தேதி பாரீசில் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் பார்டி உடற்தகுதி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மற்றொரு கால் இறுதியில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர். மழை காரணமாக நேற்று போட்டிகள் பாதிக்கப்பட்டது. உக்ரைனின் எலினா ஸ்விடோலினா- போலந்தின் இகா மோத இருந்த போட்டி இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில், ஸ்பெயினின் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை வீழ்த்தினார். நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்- கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். இதில் முதல்செட்டை 6-4 என சிட்சிபாஸ் கைப்பற்ற, 2வது செட்டில் 2-1 என முன்னிலை பெற்றார். ஆனால் மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று தொடர்ந்து நடக்கிறது.

Related Stories:

>