×

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 15 நாட்களுக்கு மேற்குவங்கத்தில் முழு ஊரடங்கு

கொல்கத்தா: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 15 நாட்களுக்கு மேற்குவங்க மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றாக மேற்குவங்கம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 20,847 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கல்வி நிலையங்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்படும் என்றும் பேருந்து போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.Tags : West Bengal , corona
× RELATED புதிய ரேஷன் கார்டு கோரி...