கொரோனா சிகிச்சைக்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பிய லேட்டர்களை ஆய்வு செய்ய மோடி உத்தரவு

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்த வெண்டிலேட்டர்கள் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பிரமதர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கொரோனாவின் இரண்டாவதுஅலை கிராமப்புறங்கள் வரை பரவி உள்ளது. இதனால், அங்கும் ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை விநியோகிக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதுடன், கண்காணிப்பதுடன், சுகாதார வளங்களை மேம்படுத்த வேண்டும். மாநிலங்களில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தில், வாரத்திற்கு 50 லட்சம் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, வாரத்திற்கு 1.3 கோடி பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவினால் அதிகம் பேர் பாதிக்கப்படுவது குறித்து எந்தவித அழுத்தம் மற்றும் நெருக்கடி இல்லாமல் மாநிலஅரசுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: