×

கொரோனாவின் வீரியத்தை குறைக்கும் புதிய மருந்து அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வருகிறது: டிஆர்டிஓ தகவல்

சென்னை: கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்கும் மருந்தாக கருதப்படும் 2 டிஜி அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 2 டிஆக்சி டி குளுக்கோஸ் என இந்த மருந்து பவுடர் வடிவிலானது. இதனை தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இதனை எடுத்துக்கொள்வோர் விரைவில் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்றும் செயற்கை ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ நிறுவனம் டெட்டிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த மருந்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து அதனை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனங்கள் இரவு பகலாக ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த 2 டிஜி மருந்து அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் முதல்கட்டமாக 10,000 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உக்கரம் அடைந்துள்ள நிலையில் இந்த 2 டிஜி மருந்து அதிலிருந்து விடுபட முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.



Tags : TRTO , corona
× RELATED டிஆர்டிஓ ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ்