×

நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது: லாவ் அகர்வால் பேட்டி

டெல்லி: கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது என மத்திய சுகாதார செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மற்றுமின்றி, இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதார செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இந்தியாவில் கொரோனா பரவல் 19.8%ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நோய் தொற்று பரவல் விகிதம் 21.9% ஆக இருந்த நிலையில் தற்போது 19.8% ஆக குறைந்தது. டெல்லி, சத்தீஸ்கர், டையூ - டாமன், அரியானா, மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று சரிந்துள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகம். ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 23.7% ஆகவும், புதுச்சேரியில் 42.3%ஆகவும் உள்ளது எனவும் கூறினார்.


Tags : Lao Agarwal , Infection rate has decreased through corona control measures in the country: Interview with Lao Agarwal
× RELATED தமிழகத்துக்கு வரும் அனைத்து...