தஞ்சையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை: கணவரிடம் விசாரணை

தஞ்சை: தஞ்சையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரியாவுக்கு தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை கிடைத்தது. இதற்காக பிரியா தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் தஞ்சை தமிழ்பல்கலை கழகம் எதிரே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இதற்கிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது. 

இதனால் வினோத்குமார் குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றார். பிரியா மட்டும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று வினோத்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பிரியா பேசினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தமிழ்பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Stories:

>