×

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழப்பு

மேற்கு வங்கம்|: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மெடிகா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடலுக்கு கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. 


மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 136பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 10.94 லட்சமாக உள்ளது. இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களில் 79.7 சதவீதம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ளனர். மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி உயிரிழப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Tags : Ashim Banerjee ,West ,Bengal ,Chief Minister ,Mamata Banerjee , Chief Minister Mamata Banerjee, brother, Corona, deceased
× RELATED ஆளுநருடன் மோதல் குழந்தை என்றால்...