×

தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: தமிழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 8 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். 17 மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு பதிவானது.


 தற்போது, அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கவலை அளித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் கூட்டு முயற்சி பலன் அளித்து வருகிறது என கூறியுள்ளது.Tags : Corona ,Tamil Nadu ,Central Health Department , In Tamil Nadu, corona, increasing, anxiety, central health
× RELATED வழக்கறிஞர்கள் மீதான புகார்கள்...