ஊரடங்கை மீறி உலா வராதீர்கள் திண்டுக்கல்லில் வலம் வருது ‘ட்ரோன்’: டிஐஜி எச்சரிக்கை

திண்டுக்கல்: தமிழகத்தில் 2ம் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல், ஊரடங்கிலும் உல்லாசமாக, அவசிமின்றி டூவீலர், கார் என ஊர் சுற்றித்திரிகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காமல், தேவையில்லாமல் ஏராளமானோர் பொதுவெளியில் சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் நகர்ப்பகுதிகளில் பறக்கும் கேமராக்களை (ட்ரோன்) கொண்டு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட், வெள்ளை விநாயகர் கோயில், பேருந்து நிலையம், திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்  கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: