திண்டுக்கல் மாவட்டத்தில் அலட்சிய அதிமுக அரசால் ரூ.46 கோடி அம்போ: திறக்கப்படாமலேயே பாழடைந்த இ-சேவை மையங்கள்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் ரூ.46 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இ-சேவை மைய கட்டிடங்கள், கடந்த ஆறு வருடங்களாக திறக்கப்படாமல், பயனற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது.  மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதிமுக ஆட்சியின் போது, கிராம மக்கள் சேவைக்காக 2015-16ல் கிராம இ-சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால், 90 சதவீதம் கட்டிடங்கள் திறப்புவிழா காணாமலே உள்ளன. மேலும் ஒரு சில ஊராட்சிகளில் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், இ-சேவை மையங்கள் கட்டப்பட்டு, 6 வருடங்களாக ஆகிறது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அலட்சிய அதிமுக அரசு, ரூ.46கோடி மதிப்பிலான கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே,  பாழடைந்த கட்டிடமாக மாற்றி விட்டது. ஒரு சில ஊராட்சிகளில்,  சிமென்ட் மற்றும் கழிவு பொருட்களை குவிக்கும் குடோனாக உள்ளது.  இ-சேவை மையங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, கொரோனா தொற்று பாதித்தவர்களை, தனிமைப்படுத்த இ-சேவை மைய கட்டிடங்களை பயன்படுத்தலாம், என்றனர்.

Related Stories: