கொரோனா வீரியத்தை தடுக்க தமிழக-ஆந்திர எல்லையில் சோதனை சாவடி மூடல்

பள்ளிப்பட்டு: கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருத்தணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின்படி, தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிப்பட்டு அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது எல்லை சோதனை சாவடியை மூடவேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி  தமிழக பகுதிக்குள் வருபவர்களை அனுமதிக்ககூடாது என்றும் உத்தரவிட்டார்.

அத்துடன் பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் சென்றாலோ சுற்றித் திரிந்தாலோ அவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி எச்சரித்தார். இந்த ஆய்வின்போது ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேந்தர் குமார், எஸ்ஐக்கள் கிருஷ்ணராஜ், பாஸ்கர், ரவிச்சந்திரன், ராகவன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories:

>