மேற்கு வங்காளத்தில் நாளை முதல் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: அம்மாநில அரசு அறிவிப்பு

மேற்கு வங்கம்: மேற்கு வங்காளத்தில் நாளை முதல் மே 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். அத்தியாவசிய அவசர சேவைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலிம் ஷாப்பிங் வளாகங்கள், உணவகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும். சில்லறைக் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மருத்துவ சார்ந்த கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும். பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில் மற்றும் பேருந்துகளில், அவசர மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கார்கள் மற்றும் டாக்சிகள் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவை, அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார மத கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பேக்கேஜிங் சேவைகள் தவிர, அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>