புதிய கல்விக்கொள்கை: அனைத்து மாநில கல்வித்துறை செயலாளருடன் மத்திய கல்வி அமைச்சர் 17-ம் தேதி ஆலோசனை

டெல்லி: புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் 17-ம் தேதி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார். ஆன்லைன் வகுப்பு, கொரோனா சூழல் உள்ளிட்டவை தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்த கல்விக்கொள்கையில் உயர் கல்வியில் முக்கிய அம்சங்களாக, அடுத்த 15 ஆண்டுகளில் கல்லூரிகளை பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முறை படிப்படியாக நீக்கப்பட வேண்டும் என்றும் படிப்படியாக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>