ஓபிஎஸ் சகோதரர் மரணம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர் ஓ.பாலமுருகன் (61). இவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த தம்பி. இவருக்கு லதா என்ற மனைவி, அஸ்மிதா  என்ற மகள் உள்ளனர். ஓ.பாலமுருகன் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன், அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடையவே மருத்துவர்கள் அழைத்துச்  செல்லுமாறு கூறியதால், நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். நேற்று அதிகாலை காலமானார்.  அவரது மறைவுக்கு, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>