கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை தொகுதியில்  இந்துஸ்தான் ஜனதா கட்சியின் வேட்பாளரும், தென் மண்டல தலைவருமான கே.ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிட்டு 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன்  வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

 எனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை  நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ததன் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். அதனால் கோவை தெற்கு தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரி மே 3ம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, எனது மனுவை பரிசீலித்து கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: