கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு மாத சம்பளத்தை வழங்கிய வாட்ச்மேன்: முதல்வர் புத்தகம் பரிசளித்தார்

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய வாட்ச்மேனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்பு பரிசாக புத்தகத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர் என்று தமிழ்க முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், சென்னை, சாலிகிராமத்தில்,  தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்து வரும் மயிலாடு துறை மாவட்டத்தைச் சார்ந்த தங்கதுரை(59)  தனது ஒரு மாத சம்பளத்தை,

பொதுப் போக்குவரத்து தற்போது இல்லாத சூழ்நிலையில், மிதிவண்டியில் வந்து, முதல்வரை நேரில் சந்தித்து வழங்க  முயற்சித்தார், முதல்வரின் அலுவல் பணி காரணமாக, அவரை நேரில் சந்தித்து வழங்க இயலாததால், தனது ஒரு மாத ஊதியமான ரூ.10,101  அரசுக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கதுரையை நேற்று  நேரில் அழைத்து, நிதி வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.

கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட பதிவு:  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்து டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட அதற்கு உரிய சிகிச்சை  கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா  நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: