ஓபிஎஸ் சகோதரர் உள்ளிட்டோர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் சகோதரர் பாலமுருகன், ‘டைம்ஸ்’ குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் கருணாகரன், சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். இதை அறிந்ததும் பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

*  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் கருணாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

* கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெருந்தொற்றுக் காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றி வந்த ஈஸ்வரன் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பாகும். ஈஸ்வரன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள வீரர்களாக நின்று கடமையாற்றுவோர் அனைவரும் முன்னெச்சரிக்கையோடும், உரிய பாதுகாப்புடனும் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>