கொரோனா தடுப்பு பணிக்கான ‘வார் ரூம்’ சேவையை பெற மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் வெளியீடு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள வார் ரூம்  சேவையை பெற மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். பதவி ஏற்பதற்கு முன்பாகவே அவர் அரசு துறை அதிகாரிகளுடன் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கொரோனா தீவிரத்தை கருத்தில் கொண்டு ‘வார் ரூம்’ என்ற கட்டளை மையத்தை திறக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் வார் ரூம் எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டது.

இந்த சேவை மையம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை விவரம், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைகளை நிர்வகிப்பது, அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கான சிறப்பு மையமாக இது செயல்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வார் ரூம் தொடங்கப்பட்டது அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘வார் ரூம்’ ஐ தொடர்பு கொள்ள மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர்- 04329-228709, செங்கல்பட்டு- 044 27427 412, சென்னை- 98844 69375, 044 46122300, திருவள்ளூர்- 044 1077, 044 27666746, காஞ்சிபுரம்- 044 27237107, 27237207, விழுப்புரம்- 04146 223265, 75399 05544, கோவை- 94999 33870, 0422-2306051, கடலூர் - 04142 1077, தர்மபுரி- 04342 231500, 04342 231508, திண்டுக்கல்- 75988 66000, 045 12460320, ஈரோடு - 97917 88852, 0424 2260211 உள்ளிட்ட 38 மாவட்டங்களுக்கு தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: