கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் கணவன் உயிருடன் எரித்து கொலை: மனைவி கைது

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பெரியார் நகர் கைவேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (42). இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (34). அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பார்வதிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுபற்றி அறிந்த பாண்டி மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளக்காதலை விட மனமில்லாத பார்வதி நேற்று முன்தினம் மாலை கணவன் வீட்டில் தூங்கியபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அறையின்  வெளி கதவை பூட்டிள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அனைத்து ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு போராடிய அவரிடம் எழும்பூர் நீதிமன்ற நடுவர் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், தனது மனைவி பார்வதி தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் பாண்டி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து, பார்வதி மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>