×

மருத்துவமனையில் இடமின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மருத்துவ மாணவி: சமூக வலைதளம் மூலம் அசத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எர்ணாவூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பாரதி (20), சீனாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்பு மூலம் சென்னையில் உள்ள வீட்டிலிருந்தே பயின்று வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அவதியுறுவதையும், பலர் உயிரிழந்து வருதையும் அறிந்த மருத்துவ மாணவி பாரதி, இதனை தடுக்கும் வகையில் தனது நண்பர்கள் 10 பேருடன் ஒன்றிணைந்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அதாவது, சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு எங்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சிடேட்டர் ஆகியவை எங்கு உள்ளன என்பதை கேட்டறிந்து, அந்த விவரங்களை உதவி கேட்கும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார். அதன்படி, கடந்த 10 நாட்களில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியுள்ளார். தன்னார்வலர்கள், மருத்துவ மாணவர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றினால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும், என இவர் தெரிவிக்கிறார்.

Tags : Medical student helping hospitalized corona patients: Stupid through social website
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி