ஊரடங்கு மீறல் ஒரே நாளில் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு

சென்னை: கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக  2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 186 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 969 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியவாசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: