திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் நிரப்பி வர ஒடிசாவுக்கு மேலும் 3 டேங்கர்கள் அனுப்பி வைப்பு

சென்னை: தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து விரைவு ரயில்கள் மூலம் டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பி தமிழகத்திற்கு அனுப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்படி தெற்கு ரயில்வே உதவியுடன் முதன்முறையாக திருவள்ளூரிலிருந்து இரு தினங்களுக்கு முன் 2 டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேலும் 3 டேங்கர் லாரிகள் விரைவு ரயில்கள் மூலம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இதுவரை 5 காலி டேங்கர் லாரிகள் சென்றுள்ளன. இதன் மூலம் 66 கிலோ லிட்டர்  ஆக்சிஜன் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மீண்டும் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து சேரும். அதன் பின் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

Related Stories: