கொரோனா தடுப்பூசி வழங்க முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெங்களூரு : தடுப்பூசி வழங்க முடியாவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்று மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக 45 வயது மேற்பட்டோருக்கே தடுப்பூசி வழங்க முடியாத நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்துடைப்பாக உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சதானந்தா கவுடா, நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடியவில்லை என்று கூறினார். போதிய உற்பத்தி இல்லாததே இதற்கு காரணம் என்று கூறிய அவர், இதற்காக தூக்கிட்டு சாக முடியுமா என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

Related Stories: