ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை : சுருட்டை முகத்தில் ஊதி சிகிச்சையளிக்கும் மாந்தீரீகவாதிகள்!!

வெனிசுலா : கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஆவிகளின் உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறும் நபர்களை தேடி மக்கள் செல்வது அதிகரித்துள்ளது. வெனிசுலா நாட்டு தலைநகர் கராகஸ் நகரில் ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை முறை நடத்தப்படுகிறது.கொரோனா அறிகுறிகளுடன் இங்கு வரும் நோயாளிகள் முன்பு சுருட்டை பிடித்து ஊதுவது அவர்களை சுற்றி நெருப்பை பற்றவைத்து மந்திரீப்பது என கொரோனாவுக்கு தாங்களாகவே ஒருமுறையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.பரம்பரையாக இத்தொழிலை செய்து வரும் ஆதி என்ற முதியவர் தான் இங்கு வருபவர்களுக்கு ஆவிகளிடம் பேசி ஆற்றல் வாங்கி தருபவராம்.கூட்டம் கூட்டமாக நோயாளிகள் ஆவிகளை தேடி வருவதற்கு காரணம் வறுமை தான் என்று சொன்னால் அது மிகையாகாது. 

Related Stories:

>