நேபாள காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆட்சியமைக்க தவறவிட்டதால் மீண்டும் சர்மா ஒலி பிரதமரானார்!!

காத்மாண்டு : நேபாளத்தில் பிரதான எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆட்சியமைக்க தவறவிட்டதால் மீண்டும் சர்மா பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்மா ஒலியை நேபாள நாட்டு அதிபர் வித்யாதேவி அறிவித்துள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சர்மா ஒலி பிரதமராக இருந்த போது, அவருக்கு மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருடமான புஷ்ப கமல் பிரஷாந்தா இடையே மோதல் வெடித்தது.

இதனால் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் சர்மா ஒலி பரிந்துரைத்தார். இதனை அதிபர் ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்த நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தலைமைகளாக பிரிந்ததால் கடந்த 10ம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஒலி  நேபாள மார்க்சிஸ்ட் அரசு தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் 13ம் தேதிக்குள் ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் வித்யாதேவி உத்தரவிட்டார்.நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த கட்சிக்கு முன்னாள் பிரதமர் புஷ்ம கமல் பிரசந்தா ஆதரவு கரம் நீட்டினார். ஆனால் மற்றொரு கட்சியான நேபாள ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்கவில்லை. இதனால் ஆட்சி அமைக்க முடியாததால் சர்மா ஒலி மீண்டும் பிரதமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 30 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் வித்யாதேவி உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories: