×

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ. 4000 வரை கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்க் அரசு அதிரடி!!

சென்னை : நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கட்டண விவரங்களை மருத்துவ மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன் படி, சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கிலோ மீட்டருக்கு 1,500 ரூபாயும் ஆக்சிஜன் சிகிச்சை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்க்கு 2,000 ரூபாயும் வென்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 4 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 கி.மீ. மேல் கூடுதலாக சென்றால், சாதாரண ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 வசூலிக்கலாம் என்றும் ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 50 வசூலிக்கலாம் என்றும் அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 100 வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உரிமம் உடனடி ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : கட்டணம்
× RELATED தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி...