வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் 7வது இடத்திற்கு பின்தங்கிய தென்ஆப்ரிக்கா

துபாய்: வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் தென்ஆப்ரிக்கா 7வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. இந்தியா நம்பர் 1 இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டெஸ்ட் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய அணி கூடுதலாக ஒரு புள்ளி பெற்று (121), தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து புள்ளிகள் அதிகம் பெற்று 120 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்து 3 புள்ளிகள் அதிகம் பெற்று 109 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இங்கிலாந்து 5 புள்ளிகளை பறிகொடுத்து 108 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு சறுக்கி உள்ளது.  பாகிஸ்தான் 3 புள்ளிகள் அதிகம் பெற்று 94 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 3 புள்ளிகள் பிளஸ்சுடன் (84புள்ளி) 6வது இடத்திலும் உள்ளன, தென்ஆப்ரிக்கா 9 புள்ளிகளை இழந்து (80) வரலாற்றில் முதன்முறையாக 7வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. இலங்கை (78புள்ளி), 8வது இடத்திலும்,  வங்கதேசம் (46)9, ஜிம்பாப்வே (35)10வது இடத்திலும் உள்ளன.

Related Stories: