×

ஐதராபாத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது :5% ஜிஎஸ்டியுடன் தடுப்பூசியின் விலை ரூ.995 ஆக நிர்ணயம் :

புதுடெல்லி: ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்தடுப்பூசியை இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. 2ம் கட்டமாக அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் வர உள்ளன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஐதராபாத்தில் முதல்முறையாக பயனாளிக்கு போடப்பட்டது.அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரமே விற்பனைக்கு வர உள்ள போதிலும் ஒருபயனாளிக்கு தடுப்பூசி போடப்பட்டது. கஸ்டம் பார்மா சர்விசஸ் நிறுவன தலைவர் தீபக் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதனிடையே ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை ரூ.995.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை 995.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி ரூ.47 என கணக்கிடப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Tags : Russia ,Itharapadam , ஸ்புட்னிக் வி
× RELATED ரஷ்யாவில் பாரம்பரிய முறைப்படி...