×

இத்தாலி ஓபன் டென்னிஸ்: எலினா, பிளிஸ்கோவா கால் இறுதிக்கு தகுதி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில், 5ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, 12ம்  நிலை வீராங்கனை ஸ்பெயினின் முகுருசாவை எதிர்கொண்டார். இதில்,  6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினா வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை 5-7, 3-6 என வென்று செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா கால் இறுதிக்குள் நுழைந்தார்.

லத்வியாவின் ஜெனொ ஓஸ்டாபென்கோ, 4-6,6-3,6-4 என ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தினார்.  இன்று நடக்கும் கால் இறுதி போட்டிகளில் பிளிஸ்கோவா-ஓஸ்டாபென்கோ, எலினா- போலந்தின் இகா,  ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி-அமெரிக்காவின் கோரி காப், குரோஷியாவின் பெட்ரா மார்டிக்- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், நடால், ஸ்வரேவ் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Tags : Italy Open tennis ,Elena ,Bliskova , Italy Open Tennis: Elena, Bliskova qualify for the quarterfinals
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் எலினா, மெட்வேதேவ்