பிரதம மந்திரி இன்சூரன்ஸ் திட்டத்தில் ₹12 பணம் செலுத்திய பெண்ணின் மகனுக்கு ₹2 லட்சம் காப்பீட்டு தொகை-வங்கி மேலாளர் வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பிரதம மந்திரி உயர் காப்பீட்டுத் திட்டத்தில் ₹12 பணம் செலுத்திய பெண் இறந்ததையொட்டி, அவரது வாரிசுக்கு ₹2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீட்டு திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த இன்சூரன்ஸ் திட்டம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீட்டு திட்டமாகும். இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் தனி நபர் இறப்பிற்கு ₹2 லட்சம் இழப்பீடும், நிரந்தர ஊனத்திற்கு ₹2 லட்சம் இழப்பீடும், உடல் ஊனத்திற்கு ₹1 லட்சம் இழப்பீடாகவும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு ₹12 மட்டும் வங்கி மூலம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர், காவேரிப்பட்டணம் இந்தியன் வங்கியில் பிரதம மந்திரி உயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தி வந்துள்ளார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி இயற்கை மரணம் அடைந்தார். இதனால், அவரது காப்பீட்டு திட்டத்தில் இருந்து, இந்தியன் வங்கி சிறப்பு கிளை மேலாளர் சிவக்குமார், இறந்த லட்சுமியின் வாரிசான அவரது மகன் ரவியிடம் ₹2 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகையை காசோலையாக வழங்கினார்.

Related Stories: