ஓசூரில் விதி மீறிய டீ கடைக்கு சீல்-அலுவலர்கள் நடவடிக்கை

ஒசூர் :  ஓசூரில், ஊரடங்கை மீறிய டீ கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடரந்து காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, பழம், காய்கறி, உணவு பார்சல் மற்றும் டீ கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நகரப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது, தங்கள் தேவைக்காக வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதன் ஒரு பகுதியாக ஓசூர் மாநகராட்சி சார்பில் அனைத்து கடைகளுக்கும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விதிமுறைகள் குறித்து எச்சரித்து வருகின்றனர். 12 மணிக்கு மேல் செயல்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும், கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது, சமூக இடைவெளி விட்டு நிற்கவேண்டும்,  கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் நகரப்பகுதியில் உள்ள கடைகளுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இதனால், 12 மணிக்கு மேல் கடைகள் யாவும் அடைக்கப்பட்டன. காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒரு சில டீ கடைகள் திறந்திருந்தது. அங்கு பார்சல் கொடுத்து அனுப்பாமல் அதே இடத்தில் குடிப்பதற்கு கூட்டம் சேர்க்கப்பட்டது. இதனைக்கண்ட மாநகராட்சி அதிகாரிகள் 2 கடைக்கு சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட விட வேண்டும். வணிகர்கள், காய்கறி வியாபாரிகள் உள்பட அனைவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி அறிவிக்கும் நடைமுறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

Related Stories: