சேலம், தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் பேருக்கு உணவு-இந்து அறநிலையத்துறை சார்பில் பார்சல் வழங்கப்பட்டது

சேலம் : இந்து சமயஅறநிலையதுறை சேலம் மண்டலம் சார்பில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தினமும் 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே உள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உடனிருப்பவர்களின் பசியை போக்குவதற்கு இந்த சமய அறநிலைதுறை சார்பில் உணவு பொட்டலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையதுறை சேலம் மண்டலத்தில் நேற்று முன்தினம்  சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் உடனிருப்பவர்களுக்கு ெமாத்தம் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதைதொடர்ந்து, நேற்று முதல் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு  மருத்துவமனையில் 1000 உணவு பொட்டலங்கள் மதியம் 12மணிக்கு  சேலம் இந்து அறநிலைய துறை உதவி கமிஷனர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் வழங்கினர். மேலும், வாழப்பாடி, ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி,மேட்டூர் அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தம் 1680 உணவு பொட்டலம் வழங்கப்பட்டன. இதேபோல், தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தம் 2500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், நேற்று இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு 450 டிபன் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து இந்து சமயஅறநிலையை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் உடனிருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில்,சேலம்  மாவட்டத்துக்கு 2500, தர்மபுரி மாவட்டத்துக்கு 2500 எனஇரு மாவட்டங்களுக்கு 5 ஆயிரம் உணவுபொட்டலங்கள் தயாரித்து வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டு வரும் கோயில்களில் வழக்கமான அன்னதானம் வழங்கும் பணியும் தொடரும்,’’ என்றனர்.

Related Stories: