விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 6000 நிதியுதவி : 8-வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

டெல்லி : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் திரு நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் கிசான் திட்டத்தைப் பற்றி:

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>