ஊரடங்கு நேரங்களில் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம்-போலீசார் வேண்டுகோள்

தொண்டி : தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொரோனாவின் தாக்கம் புரியாமல் பொதுமக்கள் சமுக இடைவெளி இல்லாமலும் மாஸ்க் அணியாமலும் பொது இடங்களில் உலா வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகவும் கொடுமையாக தாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. 12 மணி வரையிலும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க அணுமதி அளித்துள்ளனர். இதை பொதுமக்கள் பெரும்பாலும் தவறாக பயன்படுத்தும் விதமாக மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் கூட்டம் கூட்டமாக திரிகின்றனர்.

தொண்டி,நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் அவசியம் இல்லாமல் அதிகமானோர் வெளியே சுற்றி திரிவது தெரிய வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் எவ்வித பயனும் இல்லாமல் செய்யும் விதமாக ரோட்டில் உலா வருகின்றனர். தொண்டி போலீசார் தங்கள் வாகனங்களில் கூட்டம் கூடவே ண்டாம் என்றும் மாஸ்க் அணிந்து கொ ள்ளவும் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியது, பகல் 12 மணி வரையிலும் ஊரடங்கில் தளர்வு உள்ளதால் பொது மக்கள் இந்த நேரங்களில் அதிகமாக கூடுகின்றனர்.

இதனால் ஊரடங்கின் பயன் கிடைக்க வாய்ப்பு இல்லை. காய்கறி வாங்க மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை தேவை தவிர்த்து தேவையில்லாமல் வெளியே வருபவர்களே அதிகம். கொரோனாவின் தாக்கம் அறிந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

Related Stories: