கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் கொடுத்தது ரூ.2.50 கோடி அல்ல; ரூ.25 லட்சம் தான் : பிஆர்ஓ சுரேஷ் சந்திரா விளக்கம்!

சென்னை : கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும்  தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்கேற்ப, திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்கள், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு RTGS மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார். முன்னதாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பண பரிவர்த்தனை மூலம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கினார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நடிகர் அஜித் 2 கோடி ரூபாய் நிவாரண நிதியாக தந்தது என்று வெளியான செய்தி தவறானது என அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சத்தை வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: