×

மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் சென்னைக்கு வந்தடைந்தது முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்!

சென்னை : மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் நள்ளிரவில் சென்னை வந்தது. நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு, 444 டேங்கர்களில், 7115 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை, இந்திய ரயில்வே இதுவரை விநியோகித்துள்ளது.இதுவரை 115 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனது பயணத்தை முடித்துள்ளன.

இந்த நிலையில், மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன், நள்ளிரவில் சென்னை வந்தடைந்தது. 4 பெரிய டாங்குகளில் நிரப்பப்பட்ட ஆக்சிஜனுடன் தண்டையார்பேட்டை வந்தடைந்த ரயிலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர்.

பின்னர், ரயில் கண்டெய்னரிலிருந்த ஆக்சிஜன், ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு கண்டெய்னர் லாரிகளில், தலா 20 மெட்ரிக் டன் வீதம் நிரப்பப்பட்டது. அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேற்குவங்கத்தில் இருந்து வந்திருக்கும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட உள்ளதாகத் தெவித்தார். ஊரடங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தளர்வுகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தேவையுள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் வகையில் ஏற்கனவே காலி சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. அதில் ஆக்சிஜனை நிரப்பி மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. ரயில் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,West Bank , மேற்கு வங்கம்
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...