×

18 வயது முதல் 65 வயது வரை அனைவரும் உயிருக்கு போராடுகிறார்கள் சென்னைக்கு வந்த நிலைமை நம் கிராமத்துக்கு வந்தால் யாரையும் காப்பாற்ற முடியாது

* தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
* பொதுமக்களுக்கு அரசு டாக்டர் கண்ணீர் வேண்டுகோள்

சென்னை: மாவட்ட மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்ற டாக்டர் ஒருவர் கொரோனா தொற்றின் அபாயம்  குறித்தும், மக்கள் உயிருக்கு போராடும் நிலையை குறித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக  வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பணியாற்றும் அரசு டாக்டர் ஒருவர் தனது ஆடியோவில் பேசியதாவது:
ஊரில் இருந்த என்னை இப்போது சென்னையில டூட்டி போட்டு இருக்காங்க. சென்னையில் ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை  தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கிற கேசுகளை பார்க்கும்போது  தயவு செய்து நம்ம ஊர் மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும். இந்த நிலைமை, நம்ம ஊருக்கு வராது என்பது கிடையவே கிடையாது.  

எப்போது வேண்டும் என்றால் இந்த நிலைமை நம்ம ஊருக்கும் வரும். அதை தடுக்க வேண்டியது நம் பொறுப்பு நம்ம ஊரில இதுபோல வந்தது என்றால்... சென்னை போல இங்கு யாரையும் காப்பாற்ற கூட முடியாது. வீட்டில் இருங்கள். முகக்கவசம் போடுங்கள்.  கல்யாணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு போகாதீங்க.  18 வயது  பையன், 30 வயது வாலிபர், 65 வயது தாதாவும் எல்லோரும் அப்படி தான்  இருக்காங்க. எல்லோரையும் எப்படி காப்பாற்றது  என்று தெரியாமல் மருத்துவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். வீட்டில் தனிமையாக இருங்கள். சத்தான  சாப்பாடாக சாப்பிடுங்கள். முடிந்த அளவுக்கு பாலில் மஞ்சல் தூள், சர்க்கரை  போட்டு காலையில் மாலையில் குடியுங்கள். இவ்வாறு டாக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று இருந்தவர் இன்று இல்லை
தடுப்பூசி போடுறவங்க தடுப்பூசி போடுங்க. போட்டால்  இன்னும் கொஞ்சம் நல்லது தான். இன்னும் கொஞ்சம் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்  நம்ம உடம்புக்கு. பாதி இறப்பு எதனால ஆகிறது என்று தெரியவில்லை. முந்தா நாள்  நல்லாதான் பேசினாங்க அடுத்த நாள் இறந்துவிடுகிறார்கள். அது கொரோனாவாக கூட  இருக்கலாம்.

டாக்டர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போல உள்ளது
சென்னையில் இன்று நான் பணியில் இருக்கேன். கிட்டத்தட்ட 200 பேர்  வந்து நிற்கிறாங்க. எல்லோருக்கும் ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்திற்கு கீழே  இருக்கிறது. ஆக்சிஜன் தேவை. 500 படுக்கை நிரம்பி உள்ளது. இதுல புது நோயாளிகளுக்கு எங்கே படுக்கை கொடுக்கிறதுனு தெரியல. நாங்க என்ன பண்றது என்று  தெரியவில்லை. இங்கு இருக்கின்ற டாக்டர்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது போல் இருக்கிறது.

சுனாமி பலியை விட அதிகம்
சுனாமி வந்த போது செத்ததை விட தற்போது மோசமாக  செத்துக்கிட்டு இருக்காங்க. இன்றைக்கு 200 பேர் வந்தாங்க. உண்மையாக  சொல்கிறேன். எங்களிடம் படுக்கை இல்லை. ஆம்புலன்ஸ் வரிசையாக நிற்கிறது.  ஆம்புலன்சிலேயே பலர் துடிதுடித்து சாகுறாங்க. எங்களால எதுவும் பண்ண  முடியவில்ைல. எங்களால் ஆக்சிஜன் தான் கொடுக்க முடியும். ஆக்சிஜன் வைத்து  கொண்டு இருக்கிற நோயாளியே சாகுறாங்க.

அம்மாவை புதைத்து விட்டு வர்றேன்; அப்பாவை பார்த்துக்குங்க
என்னிடம் ஒருவர் எங்க அப்பாவுக்கு ‘பெட்’ கொடுங்கள்  என்று கண்ணீர் விடுகிறார். எங்க அம்மா கொரோனா வந்து இறந்துவிட்டாங்க.  எங்கள் அப்பா அதை பார்த்து ஒரு மாதிரி ஆயிட்டாரு. இப்பதான் எங்க அம்மா உடல்  வீட்டிற்கு வந்து இருக்கிறது. நான் அதை போய் காரியம் எல்லாம் செய்து  அடக்கம் செய்துவிட்டு வருகிறேன். அது வரைக்கும் எங்க அப்பாவை உயிரோட  பார்த்துக்கொள்ளுங்கள் என கண்ணீரோடு மன்றாடுகிறார்.



Tags : Chennai , Everyone between the ages of 18 and 65 is fighting for their lives. No one can be saved if the situation in Chennai comes to our village
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...