பாளை சிறைக்குள் கைதி கொலை 2 கோடி இழப்பீடு கேட்டு தந்தை ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: பாளை சிறைக்குள் கொலை செய்யப்பட்ட கைதியின் தந்தை 2 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் முத்து மனோ (27). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட இளைஞரணித் தலைவர். களக்காடு போலீசாரால் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி திருவைகுண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினர். பாளை சிறையில் கடந்த ஏப். 22ல் என் மகன் கொலை செய்யப்பட்டார். சிறைக்குள் ெகாலை செய்திடும் ேநாக்கத்திலேயே என் மகனை பாளை சிறைக்கு மாற்றியுள்ளனர். இந்தக்கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இதே போன்றதொரு மற்றொரு மனு நிலுவையில் உள்ளது. ஒரே காரணத்திற்காக மீண்டும் மனு செய்யப்பட்டுள்ளது. கொலையானவரின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பிரேதத்தை வாங்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக விசாரணை நடந்து வருகிறது என கூறப்பட்டது. இதையடுத்த இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>