ஆந்திராவில் 22 இடங்களில் தேவஸ்தானம் சார்பில் கொரோனா மருத்துவமனை: ஆக்சிஜன் வசதியுடன் ஏற்பாடு

திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது  பிரச்னையாக மாறியுள்ளது. இதற்காக திருப்பதியில் உள்ள பத்மாவதி கோவிட் மருத்துவமனையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு ஜெர்மன் கூடாரம் அமைக்கப்பட்டு  அதில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், செயல்அலுவலர் ஜவஹர் ரெட்டி வெங்கடேஸ்வர சர்வ சர்வயோ அறக்கட்டளை நிதியில் இருந்து ₹3.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தில் 22 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 4, பிரகாசம் மாவட்டத்தில் 2, அனந்தபூர் 3, கிருஷ்ணா மாவட்டத்தில் 3, கர்னூல் 2, குண்டூர் 3, காக்கிநாடா 3 மற்றும் பிற பகுதிகளில் 4 ஜெர்மன் தொழில்நுட்ப கூடாரம் அமைக்கப்பட உள்ளது. 

Related Stories: