துவக்கத்திலேயே சிறப்பாக செயல்படுகிறது திமுக அரசு: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாராட்டு

திருமங்கலம்: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாராட்டு தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த அவர் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதுரை மாவட்டத்தின் புதிய இரண்டு அமைச்சர்களுக்கு தொகுதி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தற்போது மிகவும் சவாலான நேரம். கொரோனா 2ம் அலை படுமோசமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை கவலையளிக்கிறது. இந்த சூழலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசை பொறுத்தவரை கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் துவக்கத்திலேயே நல்ல முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்’’ என்றார்..

Related Stories:

>