விளையாட்டு துளிகள்

* ஒலிம்பிக்  நடை ஓட்டத்தில் பங்கேற்க தகுதிப் பெற்றவர் கே.டி.இர்பான். இவர் பெங்களூரில் தங்கி பயிற்சி பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தடகள இந்தியர்கள்  பிரியங்கா கோஸ்வாமி, சின்தா யாதவ், ஜின்சன் ஜான்சன், பாரூல் சவுத்ரி,  ஏக்நாத் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

* ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதிப் பெற்றும்,  இந்திய அணியுடன் செல்ல முடியாதது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக  வீராங்கனை சிங்கி யாதவ் தெரிவித்துள்ளார்.

*  ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதிப்போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 29ம் தேதி நடக்கிறது. லீக் ஆட்டங்கள் எல்லாம் பூட்டிய அரங்கங்களில் ரசிகர்கள் இல்லாமல் நடந்தன. ஆனால் 50ஆயிரம் இருக்கைகள் கொண்ட இஸ்தான்புல் அரங்கில் 12 ஆயிரம் ரசிகர்களை அனுமதிப்பது  குறித்து யுஇஎப்ஏ ஆலோசித்து வருகிறது.

* பென்  ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்), ‘சூழ்நிலை எப்போது சரியாகும் என்று தெரியாத  நிலையில் இந்தமுறை ஐபிஎல் தொடரில்  விளையாடும் வாய்ப்பு இல்லை’ என்று  கூறியுள்ளார்.

Related Stories:

>