இத்தாலி ஓபன்டென்னிஸ்: காலிறுதியில் ஆஷ்லி, காஃப்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின்  ஆஷ்லி பார்தி, அமெரிக்காவின் கோரி காஃப், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்  ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ரோம் நகரில் நேற்று நடந்த 3வது சுற்று ஒன்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி(1வது ரேங்க்) ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடேர்மேடோவா(28வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அனுபவ வீராங்கனை ஆஷ்லி ஆரம்பம் முதலே அதிரடியாக புள்ளிகளை குவித்து, 6-3,6-3 என நேர் செட்களில் ெவரோனிகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் 17வயது பள்ளி மாணவி  கோரி காஃப் (35வது ரேங்க்),  பெலாரஸ் வீராங்கனை  அர்யானா சபாலங்கா(4வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர்.    முதல் செட்டை காஃப் 7-5 என்ற புள்ளி கணக்கில் டைபிரேக்கர் மூலம் வசப்படுத்தினார்.

தொடர்ந்து 2வது செட்டை காஃப் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.   காப் 2-0 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற, மாட்ரிட் ஓபன் சாம்பியனான சபாலங்கா தோற்று  வெளியேறினார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில்  செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்(1வது ரேங்க்), ஸ்பெயின் வீரர் அலெஜன்ட்ரோ டேவிட்விச்(48வது ரேங்க்) ஆகியோர் மோதினார்.  ஜோகோவிச் 6-2, 6-1 என்ற புள்ளி கணக்கில் அலெஜன்ட்ரோவை  எளிதில் வீழ்த்தினார். சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் மூலம் ஜோகோவிச் காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜோகோவிச் முன்னேற்றம் சிமோனா விலகல்

ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலேப் கால்சதை காயம் காரணமாக 2வது சுற்று ஆட்டத்தின்,  2வது செட்டின் போது பாதியில் விலகினார்.   அதனால் எதிர்ந்து விளையாடிய   ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் சிமோனா கைப்பற்றி இருந்தார்.

Related Stories:

>